logo
கோபிசெட்டிபாளையம்: இளைஞர் கொலை வழக்கின் குற்றவாளிகள்   6 பேருக்கும் ஆயுள் தண்டனை

கோபிசெட்டிபாளையம்: இளைஞர் கொலை வழக்கின் குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை

11/Aug/2021 07:21:44

ஈரோடு ஆக: கோபிசெட்டிபாளையத்தில் கொடுக்கல் வாங்கல் தகராறில்  இளைஞர் கொலை செய்யப்பட்ட  வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகள்   6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோபி அருகே உள்ள கடத்தூர் காவல் நிலைய எல்லைக்குடபட்ட உக்கடம் பகுதியில் வசிக்கும் தங்கராஜ் மகன் செந்தில் குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் என்பவருக்கு ரூ. 1800 கடனாக கொடுத்துள்ளார்  28.03.2019 அன்று

 சின்னராஜிடம்,  செந்தில்குமார்   கொடுத்த  ரூ1800 பணத்தை கேட்ட போது பணத்தை  திருப்பி தர முடியாது என்று சின்னராஜ்  தெரிவித்ததுள்ளார்.

 இந்த சம்பவம் ஊரில் வசிக்கும் அனைவருக்கும் தெரிந்ததால் ஆத்திரமடைந்த சின்னராஜ் மற்றும்  அவரது மனைவி பழனியம்மாள் அவரது மருமகன் பால்ராஜ் அவரது மனைவி ரம்யா மற்றும்  பெரியூரை சேர்ந்த உறவினர்கள் சுதாகர் அவரது தம்பி தர்மராஜ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, செந்தில் குமார் வீட்டிற்கு சென்று அங்கு வாசலில் அமர்ந்திருந்த செந்தில்குமாரை, கத்தியால் குத்தி  கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்ட  6 பேரையும் கடத்தூர் போலீசார்   கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்

 அதனைத்தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணைப்பின்னர், இறுதி  தீர்ப்பில் கூடுதல் அமர்வு  நீதிபதி ஜெகனநாதன், மேற்படி குற்றம் சாட்டபட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து தண்டனையை உறுதிசெய்தார்

Top