logo
காற்றிலிருந்து நீர் தயாரிக்கும் ஏரோ வாட்டர் நிறுவனம் ரூ.150 கோடியில் விரிவாக்கம்- இயக்குநர் தகவல்

காற்றிலிருந்து நீர் தயாரிக்கும் ஏரோ வாட்டர் நிறுவனம் ரூ.150 கோடியில் விரிவாக்கம்- இயக்குநர் தகவல்

23/Nov/2020 09:40:42

சென்னை: காற்றிலிருந்து நீர் தயாரிக்கும் ஏரோ வாட்டர் நிறுவன நவீன சாதனம் சுத்தமான சுகாதாரமான பாக்டீரியா இல்லாத குடிநீரை வழங்குகிறது. இதன் விரிவாக்க திட்டங்களுக்கு முதலீடு செய்ய ரூ.150 கோடி நிதி திரட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் ஷா தெரிவித்தார்.

தண்ணீர் உற்பத்தி செய்யும் ஏரோ வாட்டர் நிறுவனத்தின் புதிய சாதன த்துக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை 200 சாதனங்களுக்கும் மேல் இங்கு விற்பனை செய்துள்ளது. இதன் சில்லறை விற்பனையில் தனிநபர்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என நிறுவனம் சார்ந்தும் நல்ல தேவை இருக்கிறது. 

இது குறித்து இயக்குனர் சித்தார்த் ஷா கூறுகையில், 2018-ஆம் ஆண்டு, நாங்கள் தமிழகத்தில்தான் முதன்முதலாக எங்களது பணியைத் தொடங்கினோம். கடந்த 2019-ஆம் ஆண்டே தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த ஆண்டாக அமைந்ததால், எங்களது சாதனங்களுக்கு மிகச் சிறந்த விற்பனை வாய்ப்பு அமைந்தது. எங்களது நிறுவனம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை நீராக மாற்றும் தொழில் நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் தற்போது தமிழகச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்றார்.

பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது. இந்த விரிவாக்கப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்ட இந்நிறுவனம் ரூ. 150 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. ஏரோவாட்டர் நிறுவனம் தனி வீடுகளுக்கான தேவைகள் மட்டுமின்றி, சிறு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள், உற்பத்தி மற்றும் ஐ.டி. நிறுவனங்கள், பாதுகாப்புத் துறைக்கானத் தேவைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஓட்டல்கள், உணவகங்கள், சுகாதார சேவை நிறுவ னங்களுக்கு என ஏரோவாட்டர் நவீன சாதனம் நிறுவ உள்ளது என்றார் அவர்.

Top