logo
ஈரோடு மாவட்டத்தில்  76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் 2-ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் 2-ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

10/Aug/2021 11:58:12

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் 76 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது. அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடப்படும் மையங்களுக்கு முன்பு இரவிலேயே மக்கள் குவியத் தொடங்கி விடுகின்றனர்.

 இதன் காரணமாக டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர் கடந்த மாதம் 24ம் தேதி முதல் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்ட வந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடி அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலைய அலுவலர்கள் மூலம் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று சிவகிரி மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி ,சித்தோடு, திங்களூர் நம்பியூர் , டி.என் பாளையம் புளியம்பட்டி, அத்தாணி, மொடக்குறிச்சி,  அந்தியூர், கோபி உட்பட பகுதிகளிலும் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 10 இடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 76 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் 2-ம் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

டோக்கன் அடிப்படையில் 50 முதல் 300 பேர் வரை ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Top