logo
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து  தமாகா தலைவர் வாசன் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து தமாகா தலைவர் வாசன் பிரசாரம்

21/Mar/2021 09:38:00

ஈரோடு, மார்ச்:  ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

ஈரோடு மேற்கு தொகுதியில் தமிழ்மாநில காங்கிரஸ்  கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். யுவராஜாவை ஆதரித்து ஜி.கே. வாசன் பிரசாரம் செய்து பேசியதாவது:  

தமிழக அரசின் அனைத்து துறை திட்டங்களும், சலுகைகளும் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. இதனால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த நம்பிக்கையால் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. 

ஏப்ரல் மாதம்  முதல் தேதியில் மீண்டும் இங்கு வந்து மேற்கு தொகுதியில் பிரசாரம் செய்வேன். பெரும்பாலான நேரங்களில் கருத்து கணிப்புகள் முழுமையான முறையில் கொடுப்பதில்லை. மக்கள் கணிப்புதான் இறுதியானது. நல்லது செய்தவர்களுக்கு மக்கள் மனம் திறந்து வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. தொடர்ந்து நல்லதே செய்து கொண்டிருக்கிறது.  எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள்.

இப்போது உள்ள அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் நிலையை புரிந்து கொள்ளுங் கள். எங்கள் கூட்டணியை மக்கள் ஏற்று கொண்டிருக்கின்றனர். கூட்டணி பலமாக இருக்கி றது. வெற்றி பெறுவோம். வளர்ச்சி திட்டங்களை, இலவச திட்டங்களை திமுக வாயால் சொல்லி கொண்டிருக்கிறது.

ஆனால் அதனை அதிமுக செயலால் நிரூபித்து கொண்டிருக்கிறது. அதிமுக வுக்கு நம்பிக்கையோடு வாக்களிக்க தயாராக உள்ளனர். தமிழகத்தில் தேர்தலுககு பின் முதல் அணியாக வெற்றி அணியாக அதிமுக நீடிக்கும். இரண்டாவது அணியாக, எதிர்கட்சியாக திமுக விளங்கும். பிற கட்சிகள் ஒரு படி கூட மேலே போகாமல் அதே நிலையிலேயே நிற்கும் என்றார் ஜி.கே. வாசன்.  இதில், எம்.எல்.ஏ. தென்னரசு, தமாகா மாநில பொது செயலாளர் விடியல் சேகர் ஆகியோர் உடனிருந்தனர். 

...

Top