logo
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் கோவிட் தடுப்பு விதிமுறைகள் செயல்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் கோவிட் தடுப்பு விதிமுறைகள் செயல்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

06/Aug/2021 11:18:29

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் கோவிட் தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (6.8.2021) வெள்ளிக்கிழமை திடீர்  ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்,  பேருந்துகளில் அமர்ந்திருந்த பயணிகளும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் முகக்கவசம் அணிந்துள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  ஆட்சியர்  உத்தரவிட்டார்.


பின்னா; கீழராஜ வீதி, மேலராஜவீதி, பிருந்தாவனம், டிவிஎஸ்  கார்னர், மார்த்தாண்டபுரம் பகுதிகளில் பொதுமக்கள் கூடியிருந்த கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட  ஆட்சியர் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், தவறாமல் தடுப்பூசி  எடுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

பின்னா; டிவிஎஸ்  கார்னர் மற்றும் சாந்தநாதபுரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கிருந்த ஒரு அரசு மதுபானக்கடையில் அனுமதி இன்றி செயல்பட்ட மது அருந்தும் கூடத்தை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.


 கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கிறார்களா என நகராட்சியின் முக்கிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்வதுடன், பணியாளா;கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  அறிவுறுத்தினார். 

ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, காவல் துணை கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ், நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் செந்தில்குமார்,  நகர்நல அலுவலர் பூவதி, வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் வசந்த் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 

Top