logo
தியாகி கொடிகாத்த குமரனின் 117-ஆவது பிறந்த நாள் விழா அமைச்சர்கள் பங்கேற்பு

தியாகி கொடிகாத்த குமரனின் 117-ஆவது பிறந்த நாள் விழா அமைச்சர்கள் பங்கேற்பு

04/Oct/2020 07:15:14

ஈரோடு: தியாகி கொடிகாத்த குமரனின்  117-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான சென்னிமலையில் இன்று நடைபெற்ற விழாவில்  தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தப்பப்பட்டது.

தியாகி கொடி காத்த குமரனின் பிறந்த நாள் விழா தமிழக அரசால், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன்  தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன்,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணண், ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம்,  காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு ஆகியோர் பங்கேற்று  சென்னிமலை பேரூராட்சியில் கொடிகாத்த குமரன் அவர்கள் பிறந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கொடிகாத்த குமரனின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  கொடிகாத்த குமரனின் தம்பி மகன் அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது  தனது பெரியப்பா வாழ்ந்த  சென்னிமலையில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் எனவும் இந்தக் கோரிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 


Top