logo
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாஜகவில் இணைந்தார்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாஜகவில் இணைந்தார்

14/Mar/2021 01:28:17

திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்காததால், அதிருப்தியடைந்த அவர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும், அறிக்கையும் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது கூட்டணிகளுக்கு தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டு ள்ளன.இதில், திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப் பட்டதால் மருத்துவரும், திமுக எம்.எல்.ஏ.வுமான சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் எல்.முருகன் தலைமையில் மருத்துவர் சரவணன் பாஜகவில் இணைந்தார்.

Top