logo
புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிர பிரசாரம்

29/Mar/2021 10:20:45

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா புதுக்கோட்டை நகராட்சி  மற்றும் கறம்பக்குடி ஒன்றியப்பகுதிகளில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  கே.கே.. செல்லபாண்டியன்ஆலோசனைப்படி, புதுக்கோட்டை நகர செயலர் க. நைனாமுகமது  தலைமையில்  நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் புதுக்கோட்டை தொகுதி திமுக  வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா  அடப்பன்வயல் மற்றும் நகராட்சியின்  7, 8, 9  ஆகிய வார்டுகளில் சுற்றுப்பயணம் செய்து  வாக்கு சேகரித்தார். 

இதையடுத்து  பிற்பகலில்  கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் தலைமையில் கரு. கிழக்குத் தெரு, கரு.தெற்கு தெரு, கரு.வடதெரு, வானக்கன் காடு ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட  பல்வேறு கிராமங்களில்  வேட்பாளர் வை.முத்து ராஜா வாக்கு சேகரித்தார்.இதில்,  திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  திரளாக கலந்து கொண்டு  உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Top