logo
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

03/Aug/2021 01:49:04

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டின் புதிய நிர்வாகள் பதவி ஏற்பு விழாவில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையிலுள்ள மெர்லின் மஹாலில்(31.7.2021) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜெயக்கண்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  வெள்ளிவிழா ஆண்டின் புதிய தலைவர் பெர்லின்தாமஸ், செயலர் டி.கார்த்திகேயன், பொருளாளர் எஸ். கதிரேசன் மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகளுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். மேலும், 12 பேர் புதிய  உறுப்பினர்களாக இணைந்தனர்.


சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா, கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோ பங்கேற்று வாழ்த்தினர். நிர்வாக பொதுச்செயலர் எம்.ஏ. முருகப்பன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி. அந்தோணிசாமி, துணை ஆளுநர் ஜிஎஸ்எம். சிவாஜி, முன்னாள் தலைவர் பி. மதிவாணன், செயலர் எம். கோபிநாத், பொருளாளர் விஆர். வெங்கடாசலம் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

நலத்திட்ட உதவிகள்: 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000,  2 பேருக்கு கண் அறுவைச்சிகிச்சைக்காக ரூ.50,000,  புதுக்கோட்டை ராணியார் பள்ளி, திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா பள்ளி, மவுன்ட்சீயோன் பள்ளிகளின் நூலகங்களுக்கு புத்தகம் வாங்குவதற்கு ரூ.25,000,  ஆயிரம் பேருக்கு ரூ.10,000 ஆயிரம் மதிப்பில் மரக்கன்றுகள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மருத்துவர்களுக்கு பாராட்டு:  கோவிட்-19 நோய்த்தடுப்புபணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் ராஜசேகர், முனியன், அருணகிரி, ராயப்பன்குமார், அகமதுமன்சூக் உள்ளிட்டோரைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. விழாவில், புதிய உறுப்பினர்கள் உள்பட நூற்றுக்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Top