logo
ஈரோடு அருகே மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: ஈரோடு  எஸ்.பி. சசிமோகன் வழங்கல்

ஈரோடு அருகே மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: ஈரோடு எஸ்.பி. சசிமோகன் வழங்கல்

02/Aug/2021 09:26:27

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் தாவல் நிலையத்திற்கு உள்பட்ட கத்திரி மலை கிராமத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகைகள் மலை கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம், இலவச மருத்துவ முகாம் மற்றும் நல உதவி வழங்கும் விழா நடந்தது. 

நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல்கண்காணிப்பாளர்  சசிமோகன் தலைமை  வகித்து பேசியதாவது: மலைவாழ் மக்கள் சட்ட விரோதச்செயல்களுக்கு துணை போகக்கூடாது.  வாழ்க்கைக்கு ஆதாரமாகப்பயன்படக்கூடிய ஆதார் அட்டையை  அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டு்ம். நன்றாகப்படிக்கும் மலைவாழ் மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கிறது. 

குறிப்பாக பெண் கல்வியறிவு பெறுவதன் மூலம்தான் அந்த சந்ததிகள் முன்னேறமுடியும். குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும் .மேலும்  தொழில், படிப்புக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. கொரோனா  தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம்  தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  மலைப் பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும்  காவல்நிலையத்துக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் மாவட்ட எஸ்பி சசிமோகன்..

இதையொட்டி நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் அப்பகுதி  மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் கத்திரி மலையைச் சேர்ந்த 90 மலை குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், சோப்பு பவுடர், பிளாஸ்டிக் குடம்,  வேஷ்டி, போர்வை, துண்டு ,தலையணை, சில்வர் தட்டு, கோரைப்பாய், 30 பள்ளி குழந்தைகளுக்கு தலா ஒரு டிபன் பாக்ஸ் ,எழுது பொருட்கள், மற்றும் பள்ளிக்கூடத்துக்கு இரண்டு சோலார் விளக்குகள்  உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார்.

பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில், சென்னம்பட்டி வனசரகர் செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மாவோயிஸ்ட் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் ,சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Top