logo
கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல் மருத்துவர், மருத்துவ உதவியாளர் தற்காலிக பணியிடத்துக்கு  விண்ணப்பிக்கலாம்

கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல் மருத்துவர், மருத்துவ உதவியாளர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

01/Aug/2021 02:38:51

புதுக்கோட்டை, ஜூலை:      புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் தற்காலிக தொகுப்பூதிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து, புதுக்கோட்டை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்  பா.கலைவாணி  தெரிவித்ததாவது: 

கொடும்பாளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள ஒரு பல் மருத்துவர் பணியிடத்திற்கு பட்டயபடிப்பு ( B.D.S) 5 ஆண்டுகள் முடித்தவர்கள் மற்றும் காலியாக உள்ள ஒரு பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அனுபவம் பெற்றவர்களிடமிருந்தும் தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. பல் மருத்துவருக்கு மாத ஊதியம் ரூ.26,000 -மும், பல் மருத்துவ உதவியாளருக்கு மாத ஊதியம் ரூ.10,395 -மும் வழங்கப்படும். 

விருப்பம் உள்ளவர்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், சாந்தநாதபுரம் 6-ஆம் வீதி, புதுக்கோட்டை-622 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 5.8.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.  இதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நேர்முக தேர்வு 10.8.2021 அன்று காலை 10 மணி முதல் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் (புதிய கட்டிடம், மாவட்ட நீதிமன்றம் எதிரில்) புதுக்கோட்டை என்ற முகவரியில்  நடைபெறும். 

Top