logo
டெல்லியில் ஆலங்கட்டி மழை.

டெல்லியில் ஆலங்கட்டி மழை.

14/Mar/2020 07:41:02

டெல்லியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
 
டெல்லியில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.இந்நிலையில், அங்கு ஆலங்கட்டி மழை பெய்ததால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள் இதனை வீடியோ, புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Top