logo
திமுக அரசைக்கண்டித்து பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக்கண்டித்து பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

28/Jul/2021 09:55:28

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 110 இடங்களில் திமுக அரசை கண்டித்து உள்ளூர் கழக நிர்வாகிகள் தலைமையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் காலை 10 மணிக்கு உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பேரூர் கழக செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர்  வாய்க்கு வந்தவாறு வாக்குறுதி அளித்து மக்களின் வாக்குகளை பெற்றிருக்கும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதிகளை பற்றி வாய் திறக்காமல் இருப்பதை கண்டித்து முழக்கமிட்டனர். 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்   கே எஸ் பழனிச்சாமி குன்னத்தூர் பகுதியிலும், டாக்டர் பொன்னுசாமி மற்றும் பொன்னுத்துரை ஆகியோர் பெருந்துறையில் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தலைமை வகித்தனர்.

பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ் திருவாச்சி ஊராட்சியிலும் பெருந்துறை யூனியன் துணை சேர்மன் உமாமகேஸ்வரன் திங்களூர் ஊராட்சியிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் தலைமை வகித்தனர்.

ஒன்றிய கழக அவைத் தலைவர் சந்திரசேகரன் பொன்முடி ஊராட்சியிலும் பெருந்துறை வேளாண் விற்பனை சங்கத்தின் தலைவரும்,பெருந்துறை ஒன்றிய கழக செயலாளருமான விஜயன் என்கிற ராமசாமி விஜயபுரி ஊராட்சியிலும் நடந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

ஊத்துக்குளி ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் செங்கப்பள்ளி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.

குன்னத்தூர் பேரூர் கழக செயலாளர் அய்யாசாமி பூலாங்குளம் பகுதியிலும், ஊத்துக்குளி பேரூர் கழக செயலாளர் சின்னசாமி பெரிய வேலம்பாளையம் பகுதியிலும், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் கழக செயலாளர் பழனிசாமி வெள்ளியம்பாளையம் பிரிவிலும், காஞ்சிகோயில் பேரூர் கழக செயலாளர் சிதப்பன் காஞ்சிகோயில் பகுதியிலும்,

நல்லாம்பட்டி பேரூர் கழக செயலாளர் துரைசாமி நல்லாம்பட்டி பகுதியிலும், பெத்தாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் பெரியசாமி பெத்தாம்பாளையம் பகுதியிலும், பள்ளபாளையம் பேரூர் கழக செயலாளர் கமலக்கண்ணன் பள்ளபாளையம் பகுதியிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை வகித்தனர்.


பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி சாமிநாதன் பெரிய வீரசங்கிலி ஊராட்சியிலும், ரொட்டி பழனிச்சாமி சுள்ளிபாளையம் ஊராட்சியிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்றனர்.

பெருந்துறை ஒன்றியத்தில்  ஊராட்சிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதன் தலைவர்கள் தலைமை வகித்தனர்.விஜயபுரி ஊராட்சி சீனிவாசன், பொன்முடி ஊராட்சி தங்கவேலு, பெரிய வீர சங்கிலி ஊராட்சி ராதாமணி சிவகுமார், கம்பளியம்பட்டி ஊராட்சி பூபாலன், கரண்டி பாளையம் ஊராட்சி செல்வராஜ், குள்ளம்பாளையம் ஊராட்சி அர்ஜுனன், துடுப்பதி ஊராட்சி கவிதா அன்பரசு, கல்லாகுளம் ஊராட்சி வளர்மதி ரங்கசாமி, மூங்கில் பாளையம் ஊராட்சி அருணாச்சலம், முள்ளம் பட்டி ஊராட்சி சிவகாமி குழந்தைசாமி, பாண்டியன்பாளையம் ஊராட்சி செல்வமணி நாகேஸ்வரன், போல நாயக்கன் பாளையம் ஊராட்சி சரஸ்வதி சோமு, சிங்கா நல்லூர் ஊராட்சி சாந்தி மணி, தோரணவாவி ஊராட்சி ஈஸ்வரி ஆகியோர் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னிமலை ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வாய்ப்பாடி ஊராட்சி கிருஷ்ணமூர்த்தி, சிறுக்களஞ்சி  ஊராட்சி தங்கமுத்து, கூத்தமபாளையம் ஊராட்சி சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுதவிர பல்வேறு இடங்களில் நடைபெற்ற உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கழக, பேரூர் நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், முன்னாள் கழக நிர்வாகிகளும் தலைமை ஏற்று நடத்தினார்கள். 


                                                   


Top