logo
 புதுக்கோட்டை ஸ்ரீ ஆதிசக்தி வலம்புரிவிநாயகர் கோவிலில்  சங்கடஹரசதுர்த்தி  வழிபாடு

புதுக்கோட்டை ஸ்ரீ ஆதிசக்தி வலம்புரிவிநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு

28/Jul/2021 06:40:46

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை  காமராஜபுரத்திலுள்ள   ஸ்ரீ ஆதிசக்தி வலம்புரிவிநாயகர் கோவிலில் ஆடிமாத சங்கடஹரசதுர்த்தி விழா நடைபெற்றது.

கோயிலில் நடைபெற்ற சங்கடஹரசதுர்த்தியை  முன்னிட்டு  சிறப்பு சதுர்த்திப்பூஜையும் , விநாயகருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  மலர் அர்ச்சனை தீபாராதனை  நடந்தது.

வலம்புரிவிநாயகர் மலர் அலங்காரத்திலும் ஸ்ரீ ராகு,கேது  சுவாமி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்  இதில், அப்பகுதியிலுள்ள பக்தர்கள் வந்திருந்து  வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம்  வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள்   செய்திருந்தனர்.    

Top