logo
பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் போராட்டம்

25/Feb/2021 09:35:07

ஈரோடு, பிப்: பணி நிரந்தரம் செய்யவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்: 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும்.

சுழற்சி முறையில் பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.  டாஸ்மாக் ஊழியர்களை தொடர்ந்து தாக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு  டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வீரப்பன்சத்திரத்தில்  டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள், தொமுச சங்கத்தின் கவுன்சில் தலைவர் கோபால் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாவட்ட தலைவர் சின்னசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் சாதிக், டாஸ்மாக் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது மனைவி, குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Top