logo
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறை  ஒருங்கிணைப்பில் இணையவழியாக 720 மணிநேர உலக சாதனை - முத்தமிழ் கலை விழா

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறை ஒருங்கிணைப்பில் இணையவழியாக 720 மணிநேர உலக சாதனை - முத்தமிழ் கலை விழா

28/Jul/2021 05:55:44

மதுரை, ஜூலை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியியற்புல தமிழியியல் துறை, தேனமுதத்தமிழ்  மக்கள் நல அறக்கட்டளை, தில்லி கலை இலக்கியப் பேரவை, தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி, ஆரஞ்சு வேல்ட் ரிக்கார்ட் நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து இணையவழியாக 720 மணிநேர உலக சாதனை முயற்சியில் முத்தமிழ் கலை விழா என்னும் பொருளில் மிக சிறப்பாக  நடைபெற்றது. 

இந்நிகழ்வில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியியற்புலத் தமிழியியல் துறை ஒருங்கிணைப்பில் தமிழர் கலைகளும் பண்பாடும் என்னும் பொருளில் நடைபெற்ற நிகழ்விற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில், தேனமுதத்தமிழ்  மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முனைவர் லதா சந்துரு, தில்லி கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் பா குமார், தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவர் ஆஸ்டின் கில்டஸ், ஆரஞ்சு வேல்ட் ரிக்கார்ட் நிறுவன முதன்மை ஆசிரியர்  மதன்குமார் தயாளன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 

உலக சாதனை நிகழ்வில் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் பி. மருங்கன் குழுவினர் நாதஸ்வர இசையும்ää தருமபுரி மாவட்டக் கலைமாமணி கலைஞர் கே. குமாரவேல் குழுவினரின் பம்பை இசை நிகழ்வும், விருதுநகர் மாவட்டத் திரைப்படப் புகழ் கலைமாமணி  வி. லட்சுமி அம்மா குழுவினரின் நாட்டுப்புற இசைப்பாடல் நிகழ்வும், 

தூத்துக்குடி மாவட்ட கிராமியக் கலைமணி வி. கலைசுதா குழுவினரின் வில்லுப்பாட்டு இசை நிகழ்வும,திருப்பத்தூர் மாவட்டக் கிராமியக் கலைமணி பா. குமரேசன் குழுவினரின் கைச்சிலம்பாட்ட நிகழ்வும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் தமிழர் தெருக்கூத்துக் கலைஞர்கள்  இயக்கத்தின் சார்பாக தெருக்கூத்து நாடகமும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இணையவழியாக நடைபெற்றது. 

விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் வை.சி. வசந்தா, தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் இயக்குனர் முனைவர் தி. சோமசுந்தரம்,  தமிழர் தெருக்கூத்து கலைஞர்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் கலைநன்மணி ஏ. பக்கிரிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழியல்துறைத் தலைவரும், நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான தமிழ்ச்செம்மல் முனைவர் போ. சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தமிழர் தெருக்கூத்து கலைஞர்கள் இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச்  செயலாளர் மு. வசீகரன் நன்றி கூறினார்.

 


Top