11/Oct/2020 01:34:21
இது குறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் கே.ஆர். சுதந்திரராசு, ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் செல்வன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:
இந்நிலையில், நடப்புபருவத்துக்கான கரும்பு அரவை பணிகளை விவசாயிகளின் நிலுவை தொகையை வழங்கிய பிறகே தொடங்க வேண்டும். ஆலை நிர்வாகம் கூறியபடி வரும் 20-ஆம் தேதிக்குள் தொகையை வழங்கவில்லை என்றால், மாவட்டம் முழுவதும் உள்ள ஆலை அலுவலகத்தை விவசாயிகள் சார்பில் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆலை நிர்வாகத்திடம் பேசி நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நிலுவைத்தொகையை வழங்காதவரை ஆலையில் அரவைப்பணிகளை தொடங்க ஆட்சியர் அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளனர்.