logo
அக்.16-இல் பிளிப்கார்ட் நிறுவனம் விழாக்கால சிறப்பு விற்பனையை தொடங்குகிறது

அக்.16-இல் பிளிப்கார்ட் நிறுவனம் விழாக்கால சிறப்பு விற்பனையை தொடங்குகிறது

04/Oct/2020 10:02:13

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நடப்பாண்டுக்கான விழாக்கால  சிறப்பு விற்பனையை அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: பிளிப்கார்ட்டின் ‘தி பிக் பில்லியன் டேஸ்’ பண்டிகை விழாக் கால சிறப்பு விற்பனை அக்டோபர் 16-இல் தொடங்கி 21 வரை நடைபெறவுள்ளது. ஆறு நாள்கள் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பு மிக்க வாக்குறுதிகளுடன் கூடிய பல்வேறு தயாரிப்புகளை இந்த நிறுவனம் வழங்கவுள்ளது. அதே நேரம், நாடு முழுவதுமுள்ள குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இந்த சிறப்பு விற்பனை உருவாக்கித் தரும் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு  கடும் சவாலாக உள்ள அமேசான் நிறுவனமும் பண்டிகை விழாக் கால சிறப்பு விற்பனை தேதியை  வெகு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Top