logo
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில்  காவல்துறைசார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க  விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் காவல்துறைசார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு முகாம்

25/Jul/2021 02:19:32

புதுக்கோட்டை, ஜூலை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில்  காவல்துறைசார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்(24.7.2021) நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல்நிலையத்திற்குள்பட்ட  வயலோகம் கிராமத்தில் நடைபெற்ற  விழிப்புணர்வு முகாமுக்கு மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் தலைமை வகித்து பேசுகையில்,  

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்னைகளை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்து எவ்வாறு  பாதுகாத்துக் கொள்வது என்பதில்  கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் குற்றங்கள் குறித்து அச்சமின்றி காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்க முன்வர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் உதவி மையத்தை  181 மற்றும் 112   என்ற கட்டணமில்லாத தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாகவும் கூடுதல் கவனம் தேவை. மரங்களின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து மரங்களை வளர்க்க முன்வரவேண்டும் என்று  குறிப்பிட்டார் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன். 

 இதையொட்டி ,  வயலோகம் கலையரங்கம் அருகே மரக்கன்றுகள் நட்டு வைத்தார். மேலும்,  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை விநியோகித்தார்.    இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், இலுப்பூர் உட்கோட்ட  துணைக்காவல் கண்காணிப்பாளர், அன்னவாசல் காவல் ஆய்வாளர் மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Top