logo
புதுக்கோட்டைக்கு படப்பிடிப்புக்காக வந்த நடிகர் விஜய்சேதுபதிக்கு  எம்எல்ஏ- முத்துராஜா நேரில்  வாழ்த்து

புதுக்கோட்டைக்கு படப்பிடிப்புக்காக வந்த நடிகர் விஜய்சேதுபதிக்கு எம்எல்ஏ- முத்துராஜா நேரில் வாழ்த்து

25/Jul/2021 01:16:01

புதுக்கோட்டை, ஜூலை: படப்பிடிப்புக்காக புதுக்கோட்டைக்கு வந்த நடிகர் விஜய்சேதுபதியை  எம்எல்ஏ- முத்துராஜா  நேரில் சந்தித்து வாழ்த்துத்தெரிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் செல்வர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்பட படப்பிடிப்பு சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில்,  புதுக்கோட்டை பழைய தலைமை அரசு மருத்துவமனை நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா ,தொழிலதிபர் எஸ்விஎஸ். ஜெயக்குமார், ஜெ.வெங்கடேஷ், சிவாஜி   உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

அப்போது, புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா விடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தமிழகத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக  பெருமிதம் தெரிவித்தார்.

Top