logo
நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி ரூ. 1.50 கோடி மோசடி புகார்:ஈரோடு  மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி ரூ. 1.50 கோடி மோசடி புகார்:ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

25/Jul/2021 10:47:19

ஈரோடு, ஜூலை: ஈரோடு எஸ் .பி .அலுவலகத்திற்கு சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30 மேற்பட்டவர்கள் திரண்டு வந்து புகார்  மனு அளித்தனர்..

அந்த மனுவில்  கூறியிருப்பதாவது: நாங்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் எங்களிடம் அணுகி நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கி தருவதாக கூறினார். மேலும் அவர் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன்னிடம் முதலீடு செய்தால் அதற்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.50 ஆயிரம் கொடுப்பதாகவும் அதற்கான வட்டியை தானே கட்டி விடுவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். 

இதை நம்பி நாங்கள் அனைவரும் எங்கள் ஆதார் கார்டு ரேஷன் கார்டு வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் வெற்றுத்தாளில் கையெழுத்து இட்டு அவரிடம் கொடுத்தோம்.  இதையடுத்து அந்த நபர் தனியார் நிதி நிறுவனம் இடமிருந்து  ரூ. 2லட்சம் முதல் ரூ 7 லட்சம் வரை கடன் பெற்றுக் கொண்டு எங்களுக்கு 10 சதவீத தொகையை மட்டுமே கொடுத்து வந்தார். இரண்டு ஆண்டுகள் அந்த நபரை வட்டி கட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் வட்டி கட்டாததால் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை வட்டி கட்டா சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டால் அவர் பதில் ஏதும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

 புகார் மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி. சசிமோகன், இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட  குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒவ்வொருவருரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் புகாருக்குள்ளான  அந்த நபரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Top