logo
ஈரோட்டில் கொரோனா தடுப்பு  நெறிமுறைகளை கடைப்பிடிக்காத  பேக்கரிக்கு சீல்

ஈரோட்டில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பேக்கரிக்கு சீல்

10/Apr/2021 08:06:24

ஈரோடு, ஏப்:  கொரானா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத ஈரோடு வீரப்பன்பாளையத் திலுள்ள பேக்கரிக்கு ரூ. 5000  அபராதம் விதித்தது கடையை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டார்.

ரோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட நசியனூர் செல்லும் முக்கிய சாலை, வீரப்பன்பாளையம் பிரிவில் உள்ள பேக்கரியில் ஆட்சியர் சி. கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசின் கொரானா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது.

இதையடுத்து  அந்தக் கடைக்கு சீல் வைக்கவும் ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், வில்லரசம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள பேக்கரி மற்றும் மருந்துக்கடை, உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 50 சதவீத இருக்கைகள் கொண்டிருக்க வேண்டும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கடைக்கு முன்புறமாக கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Top