logo
இந்து அறநிலையத்துறை  கோயில்களில் காலிப்பணியிடங்களில் முறைகேடின்றி  நியமனம் நடைபெறும்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு

இந்து அறநிலையத்துறை கோயில்களில் காலிப்பணியிடங்களில் முறைகேடின்றி நியமனம் நடைபெறும்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு

23/Jul/2021 11:50:48

ஈரோடு, ஜூலை: இந்து அறநிலையத்துறையில் கீழ் உள்ள  கோயில்களில் உள்ள  காலிப்பணியிட ங்களில் முறைகேடின்றி  நியமனம் நடைபெறும் என்று இந்து அறநிலையத்துறை  அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். 

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தொடர்ந்து கடந்த வாரங்களாக  நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்  தொடர்ச்சியாக  ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை  சங்கமேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார்.


பின்னர் காவிரி,பவானி,அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீரை எடுத்து தெளித்து கொண்டார். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் போதுமான அடிப்படை வசதிகள் ஆய்வு நடத்தினார்.அப்போது பக்தர்கள் வழங்கப்படும் அன்னதான எண்ணிக்கை மற்றும் ஆக விதிமுறைகள் குறித்து அறநிலையத்துறையின் அலுவலரிகளிடம் கேட்டறிந்தார். 

 பின்னர் செய்தியாளர்களிடம்  அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:  தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ள 47கோவில்களில் இருந்து கூடுதலாக தரம் உயரத்துவது தொடர்பாக 539 கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 450 திருகோவில்கள் தரம் உயர்த்த பரீசிலினையில் உள்ளது.  முதல்வருடன் கலந்து ஆலோசித்து தரம் உயர்த்தப்படும்.

இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் பெரும்பாலும் பெரிய கோவில்களில் வரும் வருவாய் வைத்து சிறிய கோவில்களை நடத்தி வருவதால் அர்ச்சனை கட்டணம் நீக்கப்படுவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்படும். 

இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் முறைகேடுகள் நிகழாமல் நிரப்படும்.,மேலும் தகுதியான பணியாளர்களுக்கு  பதவி உயர்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

Top