logo
ஈரோடு மாவட்டத்தில்  முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் தனியார் பேருந்துகள் இயக்கம்

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் தனியார் பேருந்துகள் இயக்கம்

21/Jul/2021 06:41:21

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில்  முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொரோனா தாக்கம் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  பேருந்து  போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. பின்னர் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கிய இயல்பு வாழ்க்கை திரும்பியது. இதையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 5 -ஆம் தேதி மீண்டும் பேருந்து   போக்குவரத்து தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5-ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உள்ளூரிலும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 50 சதவீத பணிகள் மட்டுமே ஒரு பேருந்தில்  ஏற்ற வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்து கள் இயங்கி வருகிறது. ஆனால் தனியார் பேருந்துகள் சேவை தொடங்காமல் இருந்தது.

 ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 269 தனியார் பேருந்து கள் இயங்கி வருகிறது. இதில் மாவட்டத்திற்குள்  40 பேருந்துகளும், வெளி மாவட்டத்திற்கு 229 பேருந்து கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரூர், சேலம், கோவை, திருப்பூர்,மேட்டூர்  நாமக்கல், பழனி போன்ற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 50 சதவித பயணிகள் மட்டுமே பேருந்தில் ஏற்ற வேண்டும் என்ற விதிமுறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஈரோட்டில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்தன. 

தற்போது அனைத்து பேருந்து களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் ஈரோட்டில் தனியார் பேருந்து களை இயக்க தனியார் பேருந்து  உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதன்படி முதற்கட்டமாக நேற்று முதல் 60 தனியார் பேருந்து கள் இயங்கத் தொடங்கி உள்ளதாக தனியார் பேருந்து  உரிமையாளர்  சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.  இன்னும் சிறிது நாளில் படிப்படியாக மற்ற பேருந்து களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கிட்டத்தட்ட 65 நாட்களுக்கு பிறகு ஈரோட்டில் தனியார் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகிறது.

Top