logo
சென்னை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி

சென்னை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி

29/Jun/2021 11:53:54

சென்னை, ஜூன்:சென்னை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு ஊரக தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில்  மீட்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை வட்டத்திற்கு உள்பட்ட பல்லாவரம் நெமிலிச்சேரி  அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் 0.58 ஏக்கர் மற்றும்  2.02 ஏக்கர் நிலம்  உள்பட  மொத்தம் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தில் பல வருடங்களாக 11 நபர்களால் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2017 -ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு  78-ன்  கீழ் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு. கடந்த 2018-ஆம் ஆண்டு  வெளியேற்று உத்தரவு பிறப்பிக்கபட்டது. 

அதன் தொடர்ச்சியாக, நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற சென்னை  உயர்நீதி மன்றம், இந்து சமய அறநிலை யத்துறை உத்தரவின்படி( 28.6.2021) ஆணையர் மற்றும் இணை ஆணையரின் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்து சமய ஊரக அறநிலை யத்துறை பி.கே.சேகர்பாபு,  தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  ஜெ. குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்.ஆர். ராகுல்நாத்   ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்  ஜெயராமன், செங் கல்பட்டு உதவி ஆணையர்   வனிதா, திருக்கோயில் செயல் அலுவலர்  சக்தி மற்றும் பணியா ளர்கள் ரூ. 15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர் பரப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தைக் கோயில் வசம் கொண்டுவந்தனர்.


Top