logo
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வரும் 21 -ஆம் தேதி உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வரும் 21 -ஆம் தேதி உருவாக வாய்ப்பு

17/Jul/2021 01:50:05

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக, இரு தினங்களாக நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் ஒரு சில உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது. நேற்று மாலை முதல் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.

இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கேரளம், கர்நாடகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாவும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Top