logo
பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்: புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள்: புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

14/Jul/2021 09:56:17

புதுக்கோட்டை, ஜூலை:  பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் கடந்த 2011 -ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை அவரது சித்தப்பாவான கார்த்திக் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் குற்றவாளி கார்த்திகை கைது செய்து சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து  புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையில் குற்றவாளி கார்த்திக் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதையடுத்து அவருக்கு  இரட்டைஆயுள் தண்டனையும் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். மேலும்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே 2.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிய நிலையில் மேலும் 1.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவைத்தொடர்ந்து குற்றவாளி கார்த்திக் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.

Top