logo
ஈரோடு மாநகர் பகுதியில் குப்பைகளை பொதுமக்கள் தரம்  பிரித்து தரா விட்டால் அபராதம் விதிக்க முடிவு

ஈரோடு மாநகர் பகுதியில் குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து தரா விட்டால் அபராதம் விதிக்க முடிவு

14/Jul/2021 02:06:10

ஈரோடு, ஜூலை:ஈரோடு மாநகர் பகுதியில் குப்பைகளை பொதுமக்கள் தரம்  பிரித்து தரா விட்டால் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஈரோடு மாநகரில் 60 வார்டுகளிலும் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 200 குப்பைத் தொட்டிகள் கடந்த ஆண்டே அகற்றப்பட்டு விட்டன.பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதலில் இதன்படி மக்கள் குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்கினர். 

ஆனால் தற்போது பல்வேறு இடங்களில் அவ்வாறு  குப்பைகள் பிரித்துக் கொடுப்பது இல்லை. அப்படியே  கொண்டு போய்  போட்டு விடுகின்றனர். இந்நிலையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தராத வீடுகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top