logo
நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

14/Jul/2021 01:25:08

சென்னை, ஜூலை: நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர்12-ஆம் தேதி நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மா.சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

அரசு கைவிட்டுவிட்டது என்று மாணவர்கள் நினைக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும். என்பதே அரசின் தீர்மானம். மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை தமிழக அரசு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் என்று அவர் கூறினார்.

Top