logo
இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (நீட் 2021) தேதி அறிவிப்பு

இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (நீட் 2021) தேதி அறிவிப்பு

14/Jul/2021 01:19:34


இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (நீட் 2021) வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை தனது கட்டுரைப் பக்கத்தில் அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இந்தத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும், அதற்கான விண்ணப்ப நடைமுறைகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வலைதளம் மூலமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) மாலை 5 மணி முதல் தொடங்கும் என்றும் அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்து வந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ. ஐசிஎஸ்இ வாரியங்களின் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநில அரசுகளும் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன. தேர்வுகள் ரத்து காரணமாக, மாணவர்களுக்கு முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் கணக்கிட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டபோதும், நீட் ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் என்டிஏ வெளியிட்டது. ஆனால், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக, மிகக் குறைந்த மாணவர்களே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்

அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வை மேலும் ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில், நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது கட்டுரைப் பக்கப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வு நாடு முழுவதும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்இஏ வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வர்களுக்கு மையத்தில் முகக் கவசம்: மேலும், சுட்டுரையில் பல்வேறு தரப்பினர் எழுப்பி கேள்விகளுக்குப் பதிலளித்தும் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.  

நீட் தேர்வானது சமூக இடைவெளியைப் பின்பற்றி நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-லிருந்து 198-ஆக உயர்த்தப்பட்டுள்ளத அதுபோல, தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த 3,862 எண்ணிக்கையிலிருந்து மேலும் அதிகரிக்கப்பட உள்ளன.

அதுபோல, அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வு மையங்களில் முகக் கவசங்கள் வழங்கப்படு தேர்வு மையங்கள் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படும் என்பதோடு மையத்தி -தேர்வர்கள் நுழையும்போதும், வெளியேறும்போதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உறுதிப்படுத்தப்படும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Top