logo
புதுக்கோட்டையில்  சுற்றித்திரியும் நாய்களால் நோய் பரவும் அபாயம்... நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?

புதுக்கோட்டையில் சுற்றித்திரியும் நாய்களால் நோய் பரவும் அபாயம்... நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?

10/Jan/2021 09:39:14

புதுக்கோட்டை-ஜன:  புதுக்கோட்டை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்களின் உயிருக்குஅச்சுறுத்தலும் பல்வேறு தொற்று நோய்களை பரப்பும் அபாயம் உள்ளது.

புதுக்கோட்டை நகர் முழுவதும் தோல் உரிந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட நாய்கள்  நூற்றுக்கணக்கில் திரிகின்றன.இந்த நாய்கள் தன் உடம்பை சிலுப்பும்போது அதன் உடம்பிலிருந்து பறக்கும் கண்ணுக்குத்தெரியாத செதில் துகள்களை சுவாசிக்கும் மனிதர்களின் உடலுக்குள்  எந்த நோயை உருவாக்கும் என்பது மருத்துவர்களால் கூட கண்டுபிடிக்க முடியாது

புதுக்கோட்டையில் கேட்பாரற்று கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களால்  அடிக்கடி வாகனவிபத்து நடக்கிறது, தெருநாய்கள் குப்பைகளை கிளறுவதால் நகரில் சுற்றுச்சூழல் சுகாதாரம் கெடுகிறது.  தெருக்களுக்குல் நுழைந்தாலே துர்நாற்றம் வீசுவதையும்  உணர முடியும். இந்த வகையான நாய்கள் மனிதர்களை கடிக்கின்றன. 

நாய் கடித்ததால் தினமும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லும் எண்ணிக்கையை பார்த்தால் இதன் விபரீதத்தை மாவட்ட நிர்வாகம் உணரமுடியும். புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் இந்த தெரு நாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் விலை மதிப்பற்ற மனித உயிர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் காக்க முடியும். எனவே  மாவட்ட நிர்வாகவும், நகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Top