09/May/2021 07:19:52
சென்னை மே: அன்னையர் தினத்தையொட்டி தனது தாயார் தயாளுஅம்மையாரிடம் அவரது தனயனும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர் கொத்து அளித்து வாழ்த்துத்தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றார்.
தாய் மொழி, தாய் நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து,சீராட்டி வளர்த்த தியாகத் திருவுருவம். எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தினம் நல்வாழ்த்துகள். மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.