logo
ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் வீட்டின் சமயலறையில்  புகுந்த 6 அடி நீள கருநாகப்பாம்பு பிடிபட்டது

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் வீட்டின் சமயலறையில் புகுந்த 6 அடி நீள கருநாகப்பாம்பு பிடிபட்டது

11/Jul/2021 05:25:58

ஈரோடு, ஜூலை:ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் வீட்டின் சமயலறையில்  புகுந்த 6 அடி நீள கருநாகப்பாம்பு பிடிபட்டது.

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று இரவு மாநகர் பகுதியில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டு வேலைக்கார பெண் காபி போடுவதற்காக சமையலறைக்கு சென்றார்.

அப்போது சிலிண்டர் அருகே ஏதோ ஒன்று நெளிந்து இருப்பது போன்று அவருக்கு தெரிந்து. ஒரு வேளை எலியாக  இருக்கலாம் என்று கம்பை எடுத்து சிலிண்டர் அருகே சென்றபோது அது பாம்பு என தெரிந்தவுடன் அந்தப்பெண் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

 இதுகுறித்து அந்தப் பெண் வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தார். வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்துவிட்டனர். இதுகுறித்து பாம்பு பிடி  வீரர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யுவராஜா சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடிக்க முயன்றார். அது 6 அடி நீளமுள்ள கருநாகப்பாம்பு எனவும் கொடிய விஷத்தன்மை கொண்டது என தெரியவந்தது. இதை  யுவராஜா அந்த பாம்பை லாபகரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் அந்த பாம்பை விட்டார்

இதுகுறித்து யுவராஜா கூறும்போது, தற்போது பருவமழை காலம் என்பதால் பாம்புகள் வீடுகளுக்கு வரும். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக சிலிண்டர் அடியில், காலனி வைக்கும் இடங்கள், படிக்கட்டுகள், ஈரத்தன்மை உள்ள இடங்களில் பாம்புகள் வர வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அது இல்லாமல் மயில், கீரிப்பிள்ளை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பாம்புகள் அதிகளவு வீட்டுக்கு வருகின்றன என்றார்.

Top