logo
புயல் பாதுகாப்பு மையங்களில்  தங்கியுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது: ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தகவல்

புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது: ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தகவல்

05/Dec/2020 12:43:58

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அமரசிம்மேந்திரபுரம் பாதுகாப்பு மையத்தில் புயல் மழை காரணமாக தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து  கேட்டறிந்து ஆய்வு செய்தாh;. 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 7 செ.மீ அளவு மழை பதிவாகி உள்ளது. அதேபோன்று காலை வரை 0.8 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில்  அமைக்கப்பட்டுள்ள 31 முகாம்களில் 1,500 பொதுமக்கள் மழை காரணமாக தங்கியுள்ளனர். வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும்,  பொதுமக்கள் தங்கியுள்ள இடங்களில் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து இன்றையதினம் அமரசிம்மேந்திரபுரம் மையத்தில் தங்கியுள்ள பொதுமக்களிடம் நேரில் சந்தித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் நெம்மேலிக்காடு கிராமத்தில் மின் விநியோகம் சீரமைப்பு குறித்தும் பாh;வையிடப்பட்டது. அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் இரவு மழை காரணமாக 20 இடங்களில் மின்தடை ஏற்பட்டது. உடனடியாக மின் வாரியம்  மூலம் முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த 118 வீடுகளுக்கு நிவாரண தொகையினை தொடர்புடைய வட்டாட்சியர்களால்  உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று மழையினால் சிறு காயமடைந்த 2 நபர்களுக்கும், உயிரிழந்த 12 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று மீனவா;களுக்கு நிவாரணம் வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  இந்த ஆய்வின்போது அறந்தாங்கி வருவாய் கோட்ட உதவி ஆட்சியா.ஆனந்த் மோகன்வேளாண் துறை உதவி இயக்குநர் பாஸ்கரன், மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் வட்டாட்சியர்  மார்டின் லூதர் கிங் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Top