logo
பசுமை வளாகத்திட்டம்: புதுக்கோட்டை நீதிமன்றவளாகத்தில் ஈச்ச மரங்கள் நடப்பட்டன

பசுமை வளாகத்திட்டம்: புதுக்கோட்டை நீதிமன்றவளாகத்தில் ஈச்ச மரங்கள் நடப்பட்டன

09/Jul/2021 09:46:03

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பசுமை வளாகத்திட்டம் மூலம் ஈச்ச மரங்கள் நடப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்ற வளாகங்களிலும் சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாகபுதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நடவு செய்யும் நிகழ்வு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.

இதில்  10 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10 ஈச்ச மரங்களை வேருடன் பிடுங்கி வந்து ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு நடும் பணி நடைபெற்றது.

இதேபோல் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பூங்கா அறிவொளி பூங்கா ஆகிய இரண்டு பூங்காக்களை மேம்படுத்தும் நோக்கிலும் அங்கு புதிய வகை மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் உள்ளிட்ட நீதிபதிகள் பார்வையிட்டனர். மேலும் அந்த பூங்காக்களில் மருதமரம், வேங்கை மரம்,புங்கை மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்யப்பட்டன.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தை சுற்றி இன்னும் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நடவு செய்து குறுங்காடுகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் வருங்காலங்களில் பசுமை வாய்ந்த பகுதியாக நீதிமன்றம் வளாகப் பகுதி அமைய உள்ளதாகவும் நீதிமன்றப் பணியாளர்கள் தெரிவித்தனர்.


Top