logo
தேங்காய் அரவை கொப்பரையை குறைந்தபட்ச ஆதார விலைக்கு  தென்னை விவசாயிகள் விற்கலாம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

தேங்காய் அரவை கொப்பரையை குறைந்தபட்ச ஆதார விலைக்கு தென்னை விவசாயிகள் விற்கலாம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

04/Jul/2021 11:34:25

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் தங்களது தேங்காய் அரவை கொப்பரையை குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்து வருமானம் பெறலாம்.

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும்  அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது தேங்காய் கொப்பரையின் விலை குறைந் துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 550 மெ.டன் அரவை கொப்பரையும், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெ.டன் அரவை கொப்பரையும்  கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசினால் 2021-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான அரவை கொப்பரை கிலோ ஒன்றிக்கு ரூ.103.35 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும்கொப்பரை கொள்முதல் செப்டம்பர் 2021 வரை நடைமுறையில் இருக்கும்

இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும்விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான  NAFED  நிறுவனம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரைத்துள்ளதுஅதன்படி அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம், அயல்பொருட்கள் (1%) ) பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10% (எண்ணிக்கையில்) சுருக்கம் கொண்ட கொப்பரை 10% (எண்ணிக்கையில்) சில்லுகள் 10% (எடையில்) ஈரப்பதம் 6 %  தென்னை விவசாயிகள் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையலாம்.

 

 

Top