logo
ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் ஏற்படுத்துவேன் தமாகா  வேட்பாளர் யுவராஜா வாக்குறுதி

ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் ஏற்படுத்துவேன் தமாகா வேட்பாளர் யுவராஜா வாக்குறுதி

27/Mar/2021 08:37:26


 ஈரோடு, மார்ச்: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் ஏற்படுத்துவேன் என்றார் தமாகா வேட்பாளர் யுவராஜா உறுதியளித்தார்.

 தமாகாஅ.தி.மு.க., வேட்பாளர் எம்.யுவராஜா மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி., சாலை, டி.வி.எஸ்., வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

வாக்காளர்களிடம், வேட்பாளர் யுவராஜா பேசியதாவது:ஈரோடு பகுதியில் ஜவுளி தொழில் சார்ந்த சாய, சலவை, பிளிச்சிங், தோல் ஆலைகள் அதிகம் உள்ளது. இதனை நம்பி, பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் வாங்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும்போது, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவு நீர் சுத்திகரித்து மறுசுழற்சி மூலம், அந்நீரை பயன்படுத்த அனுமதிக்கப்படும். இதன் மூலம் ஜவுளித்தொழில் மேம்படும். 

ஈரோடு பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் ஏற்படுத்தப்படும்.இதன் மூலம், காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு சுத்தமாகும். நிலத்தடி நீர் மாசுபாடு குறையும். நோயற்ற சுற்றுச்சூழலை மக்களுக்கு ஏற்படுத்தி தர அனைத்து முயற்சிக ளையும் மேற்கொள்வேன். அத்துடன் அத்தொழில் மேம்படவும், அதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயரவும் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இதை செயல்படுத்த எனக்கு  வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார் யுவராஜா.

Top