logo
வேர்ல்டு விஷன் இந்தியா மூலம் நலிவுற்றோர், சிறு குறு விவசாயிகள், மாணவர்களுக்குரூ 44 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

வேர்ல்டு விஷன் இந்தியா மூலம் நலிவுற்றோர், சிறு குறு விவசாயிகள், மாணவர்களுக்குரூ 44 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

04/Jul/2021 01:44:21

புதுக்கோட்டை, ஜூலை: வேர்ல்டு விஷன் இந்தியா புதுக்கோட்டை வட்டார வளர்ச்சித்திட்டம்  மூலம் நலிவுற்றோர், சிறு குறு விவசாயிகள் பள்ளி மாணவர்களுக்குரூ 44 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

 புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டை வீரடி விநாயகர் கோவில் வளாகத்தில்  வேர்ல்டு விஷன் இந்திய புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், சிறு குறு விவசாயிகளுக்கு இடுபொருள் மருந்து தெளிப்பான் மற்றும் பிளஸ்2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு டிஸ்னரி புக் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அரிசி மளிகை சாமான்களும் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் உரம் மற்றும் விதைகள் உள்ளிட்ட இடு பொருள்களும் மற்றும் மாணவ மாணவிகளுக்கு டிஸ்னரி புத்தகங்கள்  உள்பட ரூ. 44 லட்சத்து 73 ஆயிரத்து 420 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேர்ல்டு விஷன் இந்தியா சகாய பிரபு, வேர்ல்டு விஷன் இந்திய திட்ட மேலாளர் கிளாடிஸ், குப்பையன்பட்டி ஊராட்சி தலைவர் கவிதா மலையாண்டி, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் தலைவர் ஸ்டெல்லா முத்துச்சாமி , வம்பன் விவசாய ஆராய்ச்சி மைய பிரபு குமார், ஆதனக்கோட்டை ஊராட்சி தலைவர் கண்ணன், சோத்துப்பாளை ஊராட்சி தலைவர் முத்துசாமி, வேர்ல்டு விஷன் இந்தியா பிரதாப் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top