logo
பெட்ரோல்- டீசல் விலை உயர்வு எதிரொலி.. ஈரோட்டில் சைக்கிள் பயன்பாட்டுக்கு மாறும் பொதுமக்கள்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு எதிரொலி.. ஈரோட்டில் சைக்கிள் பயன்பாட்டுக்கு மாறும் பொதுமக்கள்

01/Jul/2021 10:20:23

ஈரோடு, ஜூலை: பெட்ரோல்- டீசல் விலை உயர்வு காரணமாக  ஈரோட்டில்   பொதுமக்களிடம் சைக்கிளைப் பயன்படுத்துவதில்   ஆர்வம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் ,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 -ஐ தாண்டி விற்று வருகிறது.

 இதனால் நடுத்தர மக்கள் வியாபாரிகள் கடுமையான அவதி அடைந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெட் ரோல் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஜூன் மாதம் தொடக்கத்தில் ரூ.97 -க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல், படிப்படியாக உயர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதல் முறையாக ரூ.100 - ஐ தாண்டியது.  

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.37 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் 4 நாட்களுக்குள் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .101-ஐ தொட்டு விடும்.  இதனால் ஈரோட்டில் சிறு குறு வியாபாரிகள் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஈரோடு பொறுத்தவரை தொழில் நகரமாகும். தற்போது  இரு சக்கர வாகனங்களை பயன்ப டுத்துவோர் எண்ணிக்கை  அதிகரித்துக் காணப்படுகிறது. வியாபாரத்திற்காகவும், வேலைக் காகவும், வீட்டிற்கும் என மோட்டார் சைக்கிள்  தேவை அதிகரித்து காணப்படுகிறது. மோட்டார் சைக்கிளை பெரும்பாலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் இவர்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

முன்பு எதற்கெடுத்தாலும் மோட்டார் சைக்கிளில்  சென்று பழக்கப்பட்ட மக்கள் தற்போது சைக் கிளைப் பயன்படுத்தும் இந்த பழக்கத்துக்கு மாறி  வருகின்றனர்.  பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலியாக மாவட்டத்தில் கடந்த  சில நாட்களாக சைக்கிளில் செல்வோரது எண்ணி க்கை அதிகரித்துள்ளது. 

கடைக்கு செல்வதற்காகவும்,  அலுவலகத்திற்கு செல்வதற்காகவும் சைக்கிள்களை பெரும்பா லோர் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் உடற்பயிற்சி செய்யும் விதமாக  சைக்கிளை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவு சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர்.குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள்  வயதுக்கு ஏற்ப  புதிய சைக்கிள் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக சைக்கிள் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

Top