logo
திமுக கூட்டணியில் சிறப்பான இடங்களை பெறுவோம்: ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

திமுக கூட்டணியில் சிறப்பான இடங்களை பெறுவோம்: ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

22/Dec/2020 10:54:11

ஈரோடு: மனித நேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவர்  ஜவாரஹிருல்லா தலைமையில் ஈரோட்டில்  நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு  மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பாடுபட உள்ளதாகவும் , திமுக கூட்டணியில் சிறப்பான இடங்களை பெறுவோம். .அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாக செயல்பட்டு , தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை இழந்துவிட்டது.

கொரோனோ பரப்பியதாக கூறி  கைது செய்யப்பட்ட  தப்லிக் ஜமாத்தினரிடம் மன்னிப்பும் ,  இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ,  தப்லீக் ஜமாத் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு  3 வேளாண் சட்டங்களையும்  ரத்து செய்ய வேண்டும் என்றார்.


Top