logo
ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு அனுமதி

ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு அனுமதி

01/Jul/2021 07:06:42

ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் சுவிட்சர்லாந்திலும் சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆப் இந்தியாவின் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்களுக்கு பயணத்திற்கான ஒப்புதல் அளித்துள்ளன.

ஸ்டோனியா நாட்டிற்குச் செல்பவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்திய அரசினால் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரித்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் மத்திய அரசு கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தடுப்பூசி போட்டவர்களை தனிமைப்படுத்தல் இன்றி உள்ளே அனுமதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) அங்கீகரித்த கொரோணா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட நபர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணக் கட்டுப்பாடுகள் இருந்து விளக்கு பெறுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசிகளுக்கு  அனுமதியளிக்கப்படுகிறது. முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசியை  அங்கீகரித்து சேர்க்காவிட்டால் இந்தியாவுக்கு வரும் ஐரோப்பிய பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர்  என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

 

Top