logo
தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார் மறைவு: திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக இரங்கல்

தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார் மறைவு: திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக இரங்கல்

28/Jun/2021 10:11:09

தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.உதயகுமார் மறைவுக்கு திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்டச்செயலர் மணவை தமிழ்மாணிக்கம் வெளியிட்ட இரங்கல் செய்தி:

மறுமலர்ச்சி திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர், அன்புச் சகோதரர் கோ.உதயகுமார் அவர்கள் உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை(28.6.2021)  அதிகாலை உயிரிழந்தார்.

நல்ல திறன்மிக்க சிந்தனையாளர், இயக்கத்தின் பால் மாறாத பற்றாளர், தலைவர் வைகோ அவர்களை கல கலப்பாக ஆக்கிடும் மதியோகி,   சகோதரர் உதயகுமார் மறைவு என்பது இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தார்க்கு ஆறாத ரணமாகும். சகோதரர் உதயகுமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 தஞ்சையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது:

தஞ்சைம.தி.மு. மாவட்ட  செயலாளர் கோ.உதயகுமார் அவர்கள் 28.6.2021 இன்று அதிகாலை 5.மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.அண்ணாரது உடல் நல்லடக்கம் தஞ்சாவூரில் நடைபெறும் என்றும்   திருச்சி மாநகர் மதிமுக மாவட்ட செயலர் வெல்லமண்டி சோமு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Top