logo
ஈரோட்டில்  அதிமுக சார்பில் நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்குநிவாரணப் பொருட்கள் வழங்கல்

ஈரோட்டில் அதிமுக சார்பில் நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்குநிவாரணப் பொருட்கள் வழங்கல்

18/Jun/2021 04:45:36

ஈரோடு ஜூன்: கொரோனா ஊரடங்கு காரணமாக சுபகாரியங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்கு ஈரோட்டில் அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனா நோய்ப்பரவல் காரணமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை கூட்டத்துடன் விமர்சையாக நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுபகாரியங்களில் கலந்து கொண்டு தங்களது வாழ்கைக்கு  வருமானம் பெற்று  வந்த வாத்திய இசைக் கலைஞர்கள் வேலையில்லாமல்  வருவாயை இழந்து முழுமையாக பாதிக்கப்பட்டனர்.

 இவர்களுக்கு உதவும் வகையில், ஈரோடு பெரியார் நகரில் அதிமுக நிர்வாகி மனோகரன் தலைமையில்     நிவாரண  பொருட்கள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, உப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் காய்கறி உள்ளிட்ட  அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன

இதையொட்டி, கொரோனா பாதிப்பிலிருந்து ஈரோடு மாவட்டமும், தமிழகமும் விடுபட வேண்டுமென்பதை வலியுறுத்தி  இசைக் கலைஞர்கள் அனைவரும்  தங்களது வாத்தியங்களை  வாசித்து  சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

 

Top