logo
புதுக்கோட்டையில் கொரோனா நோயாளர்களுக்கு சித்தா, அலோபதி  இணைந்த கூட்டுச் சிகிச்சை

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளர்களுக்கு சித்தா, அலோபதி இணைந்த கூட்டுச் சிகிச்சை

22/Jun/2021 06:58:48

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களுக்கு சித் மருத்துவம் மற்றும் அலோபதி  மருத்துவம் இணைந்த கூட்டுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் கொரோனா நோய்த் தொற்றாளர் களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடுமியான்மலை வேளாண் கல்லூரி மகளிர் விடுதியில் இயங்கி வரும் கொரோனா  சிறப்பு சிகிச்சை மையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் எஸ்.கணேஷ்  வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சியரின் உத்தரவிட்டுள்ளார்.

 மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ்.உம்மல் கதிஜா தலைமையில் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் த.சுயமரியாதை  நோயாளர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் உண்ணும் உணவுகள் பற்றியும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மனநல ஆலோசனைகள் வழங்கியும் யோகா மற்றும் பிராணாயாமம் பற்றியும் எடுத்துக் கூறினார்.  

மேலும் அவர்களுக்கு சித்த மருந்தாக அமுக்கரா சூரணம், தாளிசாதி சூரணம், நெல்லிக்காய் லேகியம், ஆடாதோடை மணப்பாகு ஆகியவற்றை வழங்கினார்.

கொரனோ நோய்த்தொற்று காலத்தில் ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டால் விரைவில் குணம் அடைவதாகவும் நோய் தடுப்பு மருந்தாக கபசுரக் குடிநீர் வசந்த குசுமாகரம் மாத்திரை ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொண்டால் நோய் தோற்று வராமல் தடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

அப்போது சிகிச்சை மைய பொது மருத்துவர் மருத்துவர் அரவிந்தசாமி பணி நேர மருத்துவர் சௌமியா செவிலியர் பிரசன்னா ஆகியோர் உடனிருந்தனர். இதுவரை அனுமதிக்கப்பட்ட 171 பேரில் 150 க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 


Top