logo
தமிழகத்தின் 16-ஆவது  சட்டமன்ற முதல் கூட்டத்தொடர்  ஆளுநர்  உரையுடன் இன்று தொடங்குகிறது

தமிழகத்தின் 16-ஆவது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது

21/Jun/2021 07:22:50

தமிழகத்தின் 16-ஆவது  சட்டமன்ற முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று  தொடங்கும் நிலையில் எதிர்கட்சிகளின் குரல் எந்த பிரச்னையில்  ஒலிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 தமிழநாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 133 சட்டமன்ற உறுப்பினர்களுடன் திமுக வெற்றி வாகை சூடியது தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், 16 -ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர்இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிறது.

கொரோனா தொற்று பரவல் இருப்பதால் பிரம்மாண்ட இடத்தைக் கொண்ட கலைவாணர் அரங்கத்தின் 3-ஆவது மாடியில் உள்ள அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை  காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டபேரவை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் சட்டமன்ற மரபுப்படி பேரவைக்குள் அழைத்து வருகின்றனர்.

ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தத் தொடங்குவார். சுமார் ஒரு மணிநேரம் உரை நிகழ்த்துவார். அதன் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். அதன் பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைப்பெறுகிறதோ, அந்த அடிப்படையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்  ஆளுநர் உரையின் மீது தனது கருத்தை பதிவு செய்வார். இறுதியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நிறைவடையும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சியில் , தமிழக சட்டப்பேரவையில் இந்த முறை 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

 16-ஆவது தமிழகசட்டப் பேரவையில் மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில், கட்சி வாரியாக உள்ளவர்களின் எண்ணிக்கை விவரம்:

திமுக- 133.

அதிமுக-66.

காங்கிரஸ் - 18.

பாமக-5.

பாஜக-4.

விடுதலைச்சிறுத்தைகள்-4.

இந்திய கம்யூனிஸ்ட்-2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2

மொத்தம் - 234.

முக்கிய பிரச்னைகளில் தீர்மானம்: தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக, வைக் கூட்டத் தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. காவிரியின் மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி, நீட் தேர்வு, ஏழு பேர் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசால் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்தத் தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட உள்ளன. பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப  அதிமுக  உள்ளிட்ட எதிர்கட்சிகள்  தயாராகி வருகின்றன.

                                                  

        

Top