logo
திருவரங்குளம் கோயிலருகே ஆபத்தான நிலையிலுள்ள மன்னர்கள் கால கட்டிடம் அகற்றப்படுமா?

திருவரங்குளம் கோயிலருகே ஆபத்தான நிலையிலுள்ள மன்னர்கள் கால கட்டிடம் அகற்றப்படுமா?

21/Jun/2021 06:32:05

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கோயிலருகே ஆபத்தான நிலையிலுள்ள மன்னர்கள் கால கட்டிடத்தை பாதுகாப்பு கருதி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருவரங்குளத்தில்  வரலாற்றுச்சிறப்பு  வாய்ந்த சோழர் காலத்து சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாயிலில் சோழர் காலத்தில் மன்னர்களுக்கு சொந்தமாமான தனது வளர்ப்பு பிராணிகளை பராமரிப்பதற்காக   ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்ன இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. ஆண்டுகள் கடந்த பின்னர் போதிய பராமரிப்பின்றி இந்தக் கட்டிடம் பாழடைந்து மிகவும் ஆபத்தான நிலையில்  உள்ளது.


இந்தக் கட்டிடத்தின் மேல்  மரங்கள்  வளர்ந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும்  இடிந்து விழும் சூழல் உள்ளது. மேலும் மழை காலம் தொடங்கும் நிலையில்    ஆபத்து  அதிகம்தான். இதன் அருகே மக்கள் வசிக்கும்  குடியிருப்புகள் அமைந்துள்ளதை கருத்தில் கொணடு  இப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 ஆகவே அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டடத்தை அகற்றி இப்பகுதியில் கோயில் பூஜகர்களுக்கு வீடுகள் கட்ட வேண்டும் அல்லது வணிக வளாகம் அமைக்க  முன்வர வேண்டும்  என்பதே  இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  துரித நடவடிக்கை எடுக்குமா அரசின் இந்து சமய அறநிலையத்துறை.

Top