logo
மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

31/Oct/2020 11:14:06

சென்னை: நான்காவது ஊதியப் பட்டை அளிக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடினர் நம் அரசு மருத்துவர்கள். அனைத்துத் தரப்பும் நியாயம் என்று ஒப்புக் கொண்ட போன வருடப் போராட்டம் அது.

செயலாளர் பேச்சுவார்த்தை அமைச்சர் வாக்குறுதி என்று நீண்ட நாடகம், தாயுள்ளத்தோடு முதல்வர் அளித்த உறுதி என்னும் க்ளைமாக்ஸோடு முடிந்தது. இடையில் வந்த பெருந்தொற்றில், போராட்டத்தை மறந்து, உயிரையும் பணயம் வைத்து மக்களையும், அரசின் மானத்தையும் காத்தனர் அரசு மருத்துவர்கள். ஒரு வருடம் ஆகியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம் என மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்


Top