logo
திருவரங்குளம் வட்டாரப்பகுதி சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்துக்கு 100 சதவீதம் மானியம்

திருவரங்குளம் வட்டாரப்பகுதி சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்துக்கு 100 சதவீதம் மானியம்

16/Jun/2021 11:56:06

புதுக்கோட்டை, ஜூன்: திருவரங்குளம் வட்டாரப்பகுதி சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத் திட்டத்துக்கு 100 சதவீதம் மானியம் அளிக்கப்படுமென தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதி விவசாயிகள் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2021- 22 -ஆம் ஆண்டு நுண்ணீர் பாசன திட்டத்திற்கு 482 லட்சம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விவசாயிகள்சிறு குறு விவசாயிகள் என்றால் 100 சதவீதம் மானியத்துடன் தேசிய சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் .  இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படும்.

 இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு வம்பன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு  விபரத்தை பெற்று விண்ணப்பிக்குமாறு தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் வினோதா தெரிவித்துள்ளார் .

மேலும்  திருவரங்குளம் வட்டாரத்தில்  நடமாடும் காய்கறி விற்பனை  செய்திட  தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ்  நடமாடும் காய்கறி வண்டி வழங்கிட இலக்கீடு பெறப் பட்டுள்ளது  அதனை விவசாயிகள் பெற்றிட  வம்பன் தோட்டக்கலை துறை அலுவலகத்தில்  தங்களைப் பற்றிய விவரத்தினை பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது .

Top