logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)  ஜூன் 22-இல் தொடக்கம்: மனுக்களை 10.6.2021 -ஆம் தேதி முதல் 31.7.2021 தேதி வரை ஆன்லைன், இ-சேவை மையம் மூலம்  அனுப்பலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 22-இல் தொடக்கம்: மனுக்களை 10.6.2021 -ஆம் தேதி முதல் 31.7.2021 தேதி வரை ஆன்லைன், இ-சேவை மையம் மூலம் அனுப்பலாம்

14/Jun/2021 10:50:04

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) இம்மாதம் 22 -ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மனுக்களை 10.6.2021 -ஆம் தேதி முதல் 31.7.2021 தேதி வரை ஆன்லைன், -சேவை மையம் மூலம்  அனுப்பலாம்.

து குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில்  மாவட்ட ஆட்சியர்மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோன்று, நடப்பு பசலி (1430) வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் பின்வரும்  அலுவலர்களால் வருகின்ற 22.6.2021 முதல்  கிராமக் கணக்குகள் தணிக்கை நடத்தப்படவுள்ளது.

22.6.2021 அன்று  மாவட்ட ஆட்சித்தலைவரால்  கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் புதுநகர் உள்வட்டத்திற்கும், 23.06.2021 அன்று கல்லாக்கோட்டை உள்வட்டத்திற்கும், 24.06.2021 அன்று கந்தர்வகோட்டை உள்வட்டத்திற்கும்  வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

22.6.2021 அன்று மாவட்ட வருவாய் அலுவலரால் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வல்லநாடு உள்வட்டத்திற்கும், 23.6.2021 அன்று கீரமங்கலம் உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று வெண்ணாவல்குடி உள்வட்டத்திற்கும், 25.6.2021 அன்று ஆலங்குடி உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரால் நிலமெடுப்பு (தேசிய நெடுஞ்சாலை) பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் காரையூர் உள்வட்டத்திற்கும், 23.6.2021 அன்று அரசமலை உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று பொன்னமராவதி உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

22.6.2021 அன்று     சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரால் (நிலமெடுப்பு) (காவிரி குண்டாறு வைகை இணைப்புத்திட்டம்) புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்  வாராப்பூர் உள்வட்டத்திற்கும், 25.6.2021 அன்று புதுக்கோட்டை  உள்வட்டத்திற்கும்  வருவாய்த்தீர்வாயம்  நடத்தப்படவுள்ளது.

22.6.2021 அன்று புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரால் திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கீரை உள்வட்டத்திற்கும், 23.6.2021 அன்று கீழாநிலை உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று கோட்டூர் உள்வட்டத்திற்கும், 25.6.2021 அன்று விராச்சிலை உள்வட்டத்திற்கும், 29.6.2021 அன்று திருமயம் உள்வட்டத்திற்கும்; வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

அறந்தாங்கி   சார் ஆட்சியரால் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.6.2021 அன்று அத்தாணி உள்வட்டத்திற்கும், 23.6.2021 அன்று நாகுடி உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று பூவத்தக்குடி உள்வட்டத்திற்கும், 25.6.2021 அன்று  அரசர்குளம்  உள்வட்டத்திற்கும், 29.6.2021 அன்று சிலட்டூர் உள்வட்டத்திற்கும், 30.6.2021 அன்று  அறந்தாங்கி உள்வட்டத்திற்கும்; வருவாய்த் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

இலுப்பூர்   வருவாய் கோட்ட அலுவலரால்  குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.6.2021 அன்று நார்த்தாமலை உள்வட்டத்திற்கும், 23.6.2021 அன்று மாத்தூர் உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று கிள்ளுக்கோட்டை உள்வட்டத்திற்கும், 25.6.2021 அன்று குன்றாண்டார்கோவில் உள்வட்டத்திற்கும், 29.6.2021 அன்று கீரனூர் உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

22.6.2021 அன்று கலால் மேற்பார்வை அலுவலரால் (கால்ஸ் இன்டஸ்ட்ரீஸ்-குன்னத்தூர்)   இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  குடுமியான்மலை உள்வட்டத்திற்கும், 23.6.2021 அன்று சித்தன்னவாசல் உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று வீரப்பட்டி உள்வட்டத்திற்கும், 25.6.2021 அன்று இலுப்பூர் உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

22.6.2021 அன்று சமூக பாதுகாப்பத் திட்ட தனித்துணை ஆட்சியரால் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மழையூர் உள்வட்டத்திற்கும், 25.6.2021 அன்று  கறம்பக்குடி  உள்வட்டத்திற்கும்  வருவாய்த் தீர்வாயம்  நடத்தப்படவுள்ளது.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், 22.6.2021 அன்று கொடும்பாளூர்  உள்வட்டத்திற்கும், 23.6.2021 அன்று நீர்பழனி உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று விராலிமலை உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

22.6.2021 அன்று  கலால் மேற்பார்வை அலுவலரால் (கால்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கல்லாக்கோட்டை) ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில்பொன்பேத்தி உள்வட்டத்திற்கும், 23.6.2021 அன்று மீமிசல் உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று ஏம்பல் உள்வட்டத்திற்கும், 25.6.2021 அன்று ஆவுடையார்கோவில் உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

22.6.2021 அன்று         மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரால் மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருமருதூர் உள்வட்டத்திற்கும் 23.6.2021 அன்று கோட்டைப்பட்டிணம் உள்வட்டத்திற்கும், 24.6.2021 அன்று சிங்கவனம் உள்வட்டத்திற்கும் 25.6.2020 அன்று மணமேல்குடி உள்வட்டத்திற்கும்  வருவாய்த்தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.

வருவாய்த் தீர்வாயம் குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கி நடைபெறும்கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-இன் கீழ் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-இன்படி மாவட்டத்தில்; பொது இடங்களில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுமக்கள் கூட்டத்திற்கும்  தடை ஆணை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வருவாய்த் தீர்வாயம் முடிந்தவுடன் குடிகள் கூட்டம் நடைபெறாது.

எனவே, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு நேரடியாக மனுக்களை அனுப்புதலை தவிர்க்கவும், 10.6.2021 -ஆம் தேதி முதல் 31.7.2021 தேதி வரை ஆன்லைன் மற்றும்  -சேவை மையம் மூலம்  https://gdp.tn.gov.in/jamabandhi என்ற  இணையதள  முகவரியில் பொதுமக்கள்  அனைவரும் ஜமாபந்திக்கான தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் எனவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் 31.7.2021 -க்கு பின் தீர்வு செய்யப்படும்.

Top