logo
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அணைக்கட்டுகள், நீர்நிலைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது- ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அணைக்கட்டுகள், நீர்நிலைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது- ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

01/Oct/2020 12:22:20

புதுக்கோட்டை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றில் கரைகள் பலமாக உள்ளதா என்பதை பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய்துறையினர் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி  தெரிவித்தார்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஹோல்ஸ் வொர்த்  அணைக்கட்டு பழுது அடைந்து உள்ளதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தனர். இதனை தொடர்ந்து, தற்போது அந்த அணைக்கட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை தொடர்ந்து. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறதுஅதனை ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். குறிப்பாக ஹோல்ஸ் வொர்த் அணைக்கட்டு தரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம்  ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியதாவது:வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்க பலமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டு அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்போது விவசாயிகள் பெய்துள்ள பருவமழையை வைத்தும் காவிரி டெல்டா பகுதிகளில் காவிரி நீர் வந்ததைத் தொடர்ந்து விவசாயப்பணிகள் மும்முரமாக செய்து வருகின்றனர் அவர்களுக்கு தேவையான இடுபொருட்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக வேளாண் துறை அதிகாரிகளோடு இணைந்து மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. என்றார் ஆட்சியர்.

இதைத் தொடர்ந்து, மிரட்டுநிலையில் 100 பேரைக் கொண்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மூலதன நிதியான ரூ. 5 லட்சத்தில் இருந்து, வாங்கப்பட்ட டிராக்டா, கீழப்பனையூரில் மண்வளத்தை மேம்படுத்துவதற்காக பசுந்தாள் உரம் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலம் ஆகியவற்றையும் ஆட்சியர் பபார்வையிட்டார். பின்னர், 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட்டுள்ள இயந்திர நடவுப் பணிகளையும் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், நீர்வள ஆதாரத் துறை உதவிப் பொறியாளர் உமாசங்கர் உள்ளிடடோர் உடனிருந்தனர்.

Top